Powered By Blogger

Thursday, 10 December 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகாக, தனி குழு - இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகாக, தனி குழு - இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு
பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்புகளில், வெள்ளம் புகுந்ததால், 'பெஞ்ச், டெஸ்க்' போன்றவை நாசமாகியுள்ளன. மேலும், மாணவர்களின் பிறப்பு
மற்றும் மாற்று சான்றிதழ் கட்டுகளும் நீரில் மூழ்கி, பாழாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகளுக்காக, தனி குழுக்களை அமைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, இணை இயக்குனர்கள் நாகராஜ முருகன், உமா, சுகன்யா, நரேஷ், பழனிச்சாமி உள்ளிட்டோர், நேற்று பள்ளிகளை ஆய்வு செய்தனர்.அவர்கள் கண்டறிந்ததாவது:

● பள்ளிகளின் மேஜை, நாற்காலி, பெஞ்ச், டெஸ்க் ஊறிப்போய், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன

● மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், ஆசிரியர்களின் வேலை மற்றும் ஊதியம் தொடர்பான ஆவணங்களும் சேதம் அடைந்துள்ளன

● வகுப்பறைகளில் நீர் புகுந்தது மட்டுமின்றி, பாம்பு, பூனை, தேள், ஆமை, எலி, தவளை, பூச்சிகளும் புகுந்துள்ளன. அவற்றின் எச்சங்களும், வகுப்பறைகளில் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன.

அதிக பாதிப்பு
● சென்னையில், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான் பேட்டை, கிண்டி, சூளைமேடு, சி.எம்.டி.ஏ., காலனி, சாலிகிராமம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகள்
● காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், இரும்புலியூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகள்

● திருவள்ளூர் மாவட்டத்தில், அயனம்பாக்கம், மணலிபுதுநகர் உள்ளிட்ட பகுதி பள்ளிகளில், 100 சதவீத இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

No comments:

Post a Comment