Powered By Blogger

Thursday, 10 December 2015

கல்வியறிவு இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது சரியானதே: உச்ச நீதிமன்றம் அதிரடி!

கல்வியறிவு இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது சரியானதே: உச்ச நீதிமன்றம் அதிரடி!
புதுடெல்லி: கல்வியறிவு இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது சரியானதே என ஹரியானா மாநில அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட குறைந்த பட்ச கல்வித் தகுதி உள்ளிட்ட பல்வேறு விதிகளை உள்ளடக்கிய சட்ட திருத்தம் அண்மையில் கொண்டுவரப்பட்டது. 


அதன்படி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வி தகுதி ஆண்களுக்கு 10-ம் வகுப்பு, பெண்களுக்கு 8-ம் வகுப்பு மற்றும் தலித் வகுப்பினருக்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஹரியானா மாநில பெண்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் , " ஹரியானா மாநிலத்தில் உள்ள 20 வயதை தாண்டிய கிராமப்புற பெண்களில் 83.06 சதவீதத்தினர் புதிய சட்டத்திருத்தத்தின்படி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான கல்வித் தகுதியை கொண்டிருக்கவில்லை என்பதால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள். மேலும் நகர்ப்புறங்களில் உள்ள 67 சதவீதம் பெண்களும் இதே சட்டத்திருத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்" எனக் கூறியிருந்தனட். இந்நிலையில் இவ்வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் , ஹரியானா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதிகள் நிர்ணயம் செய்தது சரியானது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments:

Post a Comment