கல்வித்துறை அலுவலகப் பணியார்கள் சங்க முப்பெரும் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழ்நாடு கல்வித் துறை அலுவலகப் பணியாளர்கள் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா, சனிக்கிழமை ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட நிர்வாகம் அமைத்தல், புதிய உறுப்பினர்களுக்குப் பாராட்டு விழா, மாவட்ட நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மீ.அழகுமலை தலைமை தாங்கினார்.
கல்வி மாவட்டச் செயலாளர் ரா.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.மாவட்டக் கல்வி அலுவலக உதவியாளர் மு.வெங்கடாச்சலம் வரவேற்றார். சங்கத்தின் மாவட்டத் தலைவராக மு.வெங்கடாச்சலம், செயலாளராக பாண்டுரங்கன், பொருளாளராக தாரணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டக் கல்வி அலுவலக ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் மு.அசன் அலி, பள்ளித் துணை ஆய்வாளர் ஜி.பி.சின்னவீரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment