Powered By Blogger

Tuesday, 8 December 2015

சனிக்கிழமை பாஸ்போர்ட் முகாம்

சனிக்கிழமை பாஸ்போர்ட் முகாம்
சென்னை: 'வெள்ளத்தில் பாஸ் போர்ட் இழந்தவர்களுக்கு, புதிய பாஸ்போர்ட் வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:மழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் இழந்தவர்களுக்கு, புதிய பாஸ்போர்ட், இலவசமாக வழங்க, வரும் சனிக்கிழமை முகாம் நடத்தப்படுகிறது.சென்னை மண்டல அலுவலகம் மற்றும் சாலிகிராமம், தாம்பரம், அமைந்தகரை பாஸ்போர்ட் சேவை மையங்களில் இம்முகாம் நடக்கிறது. 

புதிய பாஸ்போர்ட் பெற, ஆன் - லைனில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. வெள்ளைத் தாளில், மழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்த விவரத்தை தெரிவித்து, விண்ணப்பித்தால் போதும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment