Powered By Blogger

Monday 11 January 2016

12,000 ஆசிரியர் சான்று சரிபார்ப்பு: சேலம் சி.இ.ஓ., ஞானகவுரி தகவல்.

12,000 ஆசிரியர் சான்று சரிபார்ப்பு: சேலம் சி.இ.ஓ., ஞானகவுரி தகவல்.
சேலம் மாவட்டத்தில், 12,000 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களில்,
போலிச் சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது

: மாவட்டத்தில் உள்ள, 21 ஒன்றியங்களில் குழுக்கள் அமைத்து, 12 ஆயிரம் ஆசிரியர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், மூன்று நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள், சான்றுகள் சமர்ப்பிக்காதவர்களிடம், அதற்குரிய காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணை குழு குறைகள் கண்டறிந்தால், மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment