Powered By Blogger

Friday 29 July 2016

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் சம்பளத்துடன் 'அரியர்ஸ்'

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் சம்பளத்துடன் 'அரியர்ஸ்'. 

'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, 'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 53 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் முதல், திருத்தியமைக்கப்பட்ட சம்பளம் கிடைக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில், 'இந்தாண்டு, ஜனவரி, 1ம் தேதி முதல், சம்பளக் கமிஷன் நடைமுறைக்கு வருவதால், அதற்கான, அரியர்ஸ் பணமும், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் திருத்தி அமைப்பதற்கு முன்பு இருந்த, டி.ஏ., எனப்படும் அகவிலைப்படியான, 125 சதவீதம் என்ற அடிப்படையில், புதிய
சம்பளம் மற்றும் அரியர்ஸ் வழங்கப்படும். திருத்தி அமைக்கப்பட்டுள்ள சம்பளத்துக்கான, புதிய அகவிலைப்படி பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment