Powered By Blogger

Thursday, 7 July 2016

அறிவித்தபடி ஜூலை 11 மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

அறிவித்தபடி ஜூலை 11 மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

திட்டமிட்டபடி இரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஜூலை 11ஆம் தேதி நடக்கும் என்று எஸ்.ஆர்.இ.எஸ் தொழிற்சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.சூரியபிரகாசம் தெரிவித்துள்ளார். 7வது சம்பளக் 
கமி‌ஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று ஒப்புதல் அளித்தாலும். சம்பள கமி‌ஷனின் பரிந்துரைகள் ஏமாற்றமளிப்பதாக மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசிடம் முன்வைத்த 26 கோரிக்கைகளில் முக்கியமானவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உறுதியாக உள்ளனர்.

தேசிய கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ராகவையா, பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா உறுப்பினர்கள் கே.கே.என்.குட்டி, ஸ்ரீகுமார் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி நிதி, உள்துறை மற்றும் ரெயில்வே மந்திரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 27 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வழங்காமல் வைத்திருக்கும் அனைத்து அலவன்ஸ்களையும் முழுமையாகத் தர வேண்டும். ரயில்வே துறையில் தனியார்மயம், புதிய பென்ஷன் திட்டம் போன்ற திட்டங்களைக் கைவிட வேண்டும். முக்கியமான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டங்கள் கைவிடப்படும். ஆனால், எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையாவோ, ஊழியர்களின் கோரிக்கைகளை பரீசிலிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால், இது கண்ணையாவின் தனிப்பட்ட கருத்துதானே தவிர அனைத்து தொழிற்சங்கங்களின் கருத்து கிடையாது என்றுகூறி அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது. இரயில்வே தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசுக்கு 5 நாள் கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கெடு நேற்று இரவோடு முடிந்துவிட்டது. இதனால், இன்று அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசித்து சில முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள். இவ்வாறு எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.சூரியபிரகாசம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரெயில்வே, தபால், வருமானவரி, சுங்கம், ஆடிட்டர் ஜெனரல் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் வருகிற 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்

No comments:

Post a Comment